இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் பெறப்பட்ட கடன் தொகையானது முழு வருட அரசாங்க செலவீனத்தை விடவும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தலைமையிலான குழு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் ருஹுணு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையின் கலாநிதி நந்தசிறி கெம்பியஹெட்டி தெரிவித்துள்ளார்.
பெருந்தொகை கடன்
இந்த ஆய்வின் படி ஜனவரி மாத தொடக்கத்தில் அரசின் மொத்தக் கடன் 17 இலட்சத்து ஐம்பத்து எட்டாயிரத்து தொள்ளாயிம் கோடி ரூபாவாக இருந்துள்ளது.
இதனை தொடர்ந்து இவ்வருடம் ஏப்ரல் மாத இறுதிக்குள் இந்த தொகை 23 இலட்சத்து 31 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் மாத்திரம் அரசாங்கத்தின் நிகர கடன் அதிகரிப்பு 572,000 கோடி ரூபாவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.